ஓய்வூதியர் தினவிழா கொண்டாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பாரதிநகரில் தமிழ்நாடு சமூக நலத்துறை ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் மதுரை மண்டல அளவிலான ஒய்வூதியர் தினவிழா நடந்தது.

மாநில தலைவர் பி.குபேந்திர பாபு தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலளர் வாசுதேவன், மாநில துணைத் தலைவர்கள் வெங்கட்ராமன், ருக்மணி, மதுரை மண்டலத் தலைவர் நாகராஜ், மாவட்ட தலைவர் சாவித்திரி முன்னிலை வகித்தனர்.

ஆரோக்கியா மருத்துவமனை சார்பில் டாக்டர் வித்யா பிரியதர்ஷினி தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. முன்னதாக ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர். மண்டல இணைச்செயலாளர் காசிமாயன், மாவட்ட, மாநில நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement