கலங்களான காவிரி குடிநீர் விநியோகம் ஐந்து நாட்களாக தொடரும் அவலம்
கடலாடி: கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கலங்கலான நிலையில் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் கிராம மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
கடலாடி அருகே கண்டிலான் ஊராட்சிக்கு உட்பட்ட இ.நெடுங்குளம் கிராமத்தில் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற நிலையில் இல்லாமல் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து கலங்கிய நிலையில் தண்ணீர் குழாய்கள் மூலமாக வினியோகம் செய்யப்படுகிறது. இ.நெடுங்குளத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் கூறியதாவது:
கிராம மக்கள் பெரும்பாலும் காவிரி நீரையே பருகுகின்றனர். சமையல் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் காவிரி நீர் பயனுள்ளதாக உள்ளது. இந்நிலையில் கலங்கிய நிலையில் விநியோகம் செய்யப்படுவதால் ஐந்து நாட்களாக தண்ணீர் பயன்பாடின்றி உள்ளது.
இதனால் குடம் ரூ.12 விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
எனவே காவிரி நீர் பராமரிப்பாளர்கள் உரிய முறையில் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.