பல ஆண்டுகளாக சீரமைக்காத கருங்குடி ரோடு: மக்கள் அவதி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருங்குடி ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் கிராமத்தினர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, இருதயபுரம் விலக்கு எதிர்ப்புறத்தில் இருந்து கருங்குடி கிராமம் செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 2 கி.மீ., ரோடு உள்ளது. இந்த ரோட்டின் மூலமே கிராமத்தினர் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்திற்கு செல்லும் ரோடு, தேசிய நெடுஞ்சாலை விலக்கிலிருந்துசீரமைக்கப்படவில்லை.

இதனால் ரோட்டில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ரோடு குண்டும்குழியுமாக மாறி உள்ளதுடன் பல இடங்களில் ரோடு மண் சாலையாக மாறியுள்ளது.

இதனால் மழைக்காலங்களில் இந்த ரோட்டில் கிராமத்தினர் கடுமையான சிரமத்தைசந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் கிராமத்தினர் சார்பில் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கருங்குடி செல்லும் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர்.

Advertisement