ராமேஸ்வரம் வாறுகால்களில் பாலிதீன் கழிவால் துர்நாற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சி வாறுகாலில் பாலிதீன் கழிவுகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

ராமேஸ்வரம் துறைமுக வீதி செல்லும் கடற்கரை சாலையில் துறைமுகம் அலுவலகம், இந்திய கடற்படை முகாம், ஏராளமான டீக்கடைகள், லேத்,பட்டறைகள் உள்ளன.

இச்சாலையில் தினமும் ஏராளமான சரக்கு லாரிகள் மீன்களை ஏற்றி செல்வதும், டூவீலரில் மீனவர்கள் சென்று வருகின்றனர்.

இச்சாலை ஓரத்தில் மழை நீர் வாறுகால் உள்ளது. இந்த வாறுகாலில் மாந்தோப்பு தெரு, முனியசாமி கோவில் தெரு, என்.எஸ்.கே.வீதியில் தேங்கும் மழை நீர் கடலில் கலக்கும். ஆனால் இச்சாலை ஓரத்தில் உள்ளஓட்டல்கள், லேத், பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவுகளை வாறுகாலில் கொட்டி விடுகின்றனர்.

இதனால் வாறுகாலில் பாலிதீன் கழிவுகள், உணவு கழிவுகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

வாறுகாலை சுத்தம் செய்து சுகாதாரம் பராமரிக்க கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Advertisement