பள்ளி மாணவர்களுக்கு  தமிழி கல்வெட்டு பயிற்சி

ராநாதபுரம்: திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் 'தமிழி' கல்வெட்டுப் பயிற்சி நடந்தது.

தலைமையாசிரியர் மகேந்திரன் கண்ணன் தலைமை வகித்தார்.

திருப்பரங்குன்றம், திருமலை, கீழக்குயில்குடி, ஜம்பை உள்ளிட்ட மலைக்குகைகள், நடுகற்கள், பானை ஓடுகளில் காணப்படுகின்ற தொன்மையான தமிழி கல்வெட்டுகளின் படங்கள், அச்சுப்படிகள் மூலம் தமிழி எழுத்துகளை எழுதவும், வாசிக்கவும் மன்றச் செயலர் ராஜகுரு, தொன்மை பாதுகாப்பு மன்ற பயிற்சியாளர் ராஜகுரு பயிற்சி அத்தார். 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் 25 பேருக்கு பயிற்சிக்குரிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Advertisement