மழை பெய்யாமலும், பெய்த மழையாலும் பயிர்கள் பாதிப்பு
இவ்வொன்றியத்தில் விவசாயிகள் நெல், கடலை, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். செட்டிகுறிச்சி, முசுண்டபட்டி, புழுதிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் உளுந்து பயிரை தனியாகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்துள்ளனர்.
கார்த்திகை பட்டத்தில் விதைக்கப்பட்ட பயிர் வளர்ந்து பூத்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பூக்கள் அனைத்தும் உதிர்ந்து செடிகள் காயும் தருவாயில் உள்ளது. விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
பழனிக்குமார், விவசாயி செட்டிகுறிச்சி; தமிழகத்தில் பரவலாக மழை பெய்தும் எஸ்.புதுார் ஒன்றியத்தில் இந்த ஆண்டு போதிய மழை இல்லை. இதனால் வம்பன் 11 ரக உளுந்து பயிரை 10 ஏக்கரில் தனிப் பயிராகவே சாகுபடி செய்திருந்தேன். எதிர்பாராத நேரத்தில் பெய்த மழையால் பூக்கள் கொட்டி செடி அழுகும் தருவாயில் உள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு நெல், மிளகாய், கடலை சாகுபடியில் இப்பகுதி விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். இந்த ஆண்டும் அதேபோன்ற நிலையே உள்ளது. மற்ற பகுதிகளில் மழை பெய்திருந்தாலும் இப்பகுதியில் மழை பெய்யாமலும், பெய்த மழையாலும் பயிர்கள் சேதமடைந்துள்ளது. சில இடங்களில் விவசாயமே நடைபெறவில்லை. எனவே இவ்வொன்றியத்தை முழுமையாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தர வேண்டும்.