வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா
சிவகங்கை: வேலுநாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை தேவஸ்தான அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
சிவகங்கையில் வேலுநாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு தேவஸ்தான அலுவலகத்தில் பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் ரத்ததான முகாம் நடந்தது.
மன்னர் பள்ளிகளின் செயலர் குமரகுரு, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் முன்னிலை வகித்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன் தலைமையில், ரத்த வங்கி அலுவலர் சித்துஹரி உள்ளிட்டோர் தேவஸ்தான ஊழியர்களிடம் ரத்தம் சேகரித்து, அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பினர்.
இதில் லயன்ஸ் சங்க தலைவர் விஸ்வநாதன், அரசு மருத்துவமனை அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணன், குமார், ஜவஹர் கிருஷ்ணன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர்.
*சிவகங்கை அருகே ராகிணிபட்டியில் உள்ள வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் பிறந்த நாள் விழா நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன், எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி, வேலுநாச்சியார், குயிலி சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, உதவி இயக்குனர் (ஊராட்சி) கேசவதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., சார்பில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., காங்., சார்பில் நகர் தலைவர் விஜயகுமார், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பாலையா, தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ஜாபர் பர்வேஸ், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு சார்பில் (பன்னீர்செல்வம் அணி) மாவட்ட செயலாளர் அசோகன் மரியாதை செய்தனர்.