உலக இசை தின விழா
சிவகங்கை: சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் உலக இசை தின விழா நடந்தது.
மிருதங்க ஆசிரியர் நாராயணன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் சிவன் தலைமை வகித்தார். 'குழலும் யாழும்' என்ற தலைப்பில் இசையரங்கம் நடந்தது. எஸ்.மீனாட்சி, திருவாரூர் மத்திய பல்கலை இசைத்துறை ஆராய்ச்சி மாணவி எம்.பைரவி ஆகியோர் குழலிசை, வில்யாழிசை குறித்து பேசினர். ரமேஷ்பாபு மிருதங்கம் வாசித்தார். வயலின் ஆசிரியர் ஆர்.டி., ஜெகதீசன் இசையரங்க தொகுப்புரை நிகழ்த்தினார். செயல்முறை கருத்தரங்கை பரதநாட்டிய ஆசிரியை எஸ்.கவிதா துவக்கி வைத்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலை கவின் கலைத்துறை தலைவர் (ஓய்வு) சுப.சரளா பேசினார். குரலிசை ஆசிரியர் பி.அய்யனார் நன்றி கூறினார்.
விழாவில் சிறுவர் ஜவஹர் மன்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். நாதஸ்வர ஆசிரியர் திருவாசக ரமேஷ் நன்றி கூறினார்.