மீன் பிடிக்க சென்ற கணவர் மாயம் கண்டுபிடித்து தர மனைவி கோரிக்கை

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் களிமண்குண்டைச் சேர்ந்த ஜாஹிர் ஹூசேன் மீன் பிடி தொழிலுக்கு சென்றவரை காணவில்லை. கண்டுபிடித்து தர வேண்டும் என அவரது மனைவி ஜெபரால் எஸ்.பி., சந்தீஷிடம் மனு அளித்துள்ளார்.

மனுவில் தெரிவித்திருப்பதாவது: எங்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. 10 நாட்களுக்கு முன்பு மீன் பிடி தொழிலுக்கு துாத்துக்குடி மாவட்டம் தருவைகுளம், ஏர்வாடி பகுதியை சேர்ந்த மீனவர்களுடன் மீன் பிடிக்க செல்வதாக சொல்லி சென்றவர் திரும்பி வரவில்லை.

இருநாட்களாக அலைபேசியில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப், என வருகிறது. எனது கணவர் குறித்து எந்த தகவலும் இல்லை. திருப்புல்லாணி போலீஸ் ஸ்டேஷனில் விசாரித்த போது ஏர்வாடி போலீஸ் ஸ்டேஷனில் சென்று விசாரிக்கும்படி தெரிவித்தனர். அங்கும் தகவலும் தெரிவிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர்.

எனது கணவர் இறந்து விட்டாரா, உயிருடன் இருக்கிறாரா, அவர் இறந்து விட்டால் அதற்கான காரணம் யார் என்பது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,என தெரிவித்துள்ளார்.

Advertisement