எஸ்.ஐ.,களுக்கு பயிற்சி நிறைவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பதவி உயர்வு பெற்ற எஸ்.ஐ.களுக்கு 9 வார கால பயிற்சி நிறைவு பெற்றது. 3 மாதம் செயல்முறை பயிற்சிக்கு பின் எஸ்.ஐ., யாக பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஐ.,யாக இருந்த 14 பேரும், சிவகங்கையை சேர்ந்த 6 பேர் என 20 பேருக்கு எஸ்.ஐ.,பதவி உயர்வு வழங்கப்பட்டது. இவர்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பணியிடை பயிற்சி முகாமில் 9 வாரங்களாக அடிப்படை பயிற்சியும், கவாத்து பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழாவில் சந்தீஷ் எஸ்.பி., பணி குறித்து அறிவுரை வழங்கினார். பயிற்சி நிறைவு பெற்ற எஸ்.ஐ., களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் 3 மாதம் செயல்முறை பயிற்சி அளிக்கப்படும்.
அதன் பின் இவர்களுக்கான பணியிடம் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement