முடியும் ஐயப்ப சீசன்: ஆடு விற்பனை ஜோர்
இடைப்பாடி: ஐயப்ப சீசனால், சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் சந்தைக்கு, சில வாரங்களாக ஆடுகள் வரத்து, விற்பனை குறைவாக இருந்-தது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர்.
அதன்படி கடந்த வாரம், 2,900 ஆடுகள் கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று, 3,850 ஆடுகளை, வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்தனர். அதற்கேற்ப விலையும், 300 ரூபாய் வரை அதிகரித்து, 10 கிலோ ஆடு, 7,350 முதல், 7,950 ரூபாய் வரை விலைபோனது. இதன்-மூலம், 3.05 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.இதுகுறித்து சேலம் மாவட்ட ஆடு வியாபாரிகள் சங்க தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், ''ஐயப்ப சீசன் முடிந்து வருவதால் சந்-தையில் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. தைப்பூசத்துக்கு பின் ஆடு விற்பனை மேலும் அதிகரிக்கும்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement