சேலம் வழியே கயாவுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
சேலம்: மகா கும்பமேளாவை முன்னிட்டு, சேலம் வழியே கயாவுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவனந்தபுரம் வடக்கு - கயா சிறப்பு ரயில், வரும், 7, 21, பிப்., 4 ஆகிய செவ்வாய் மதியம், 2:00க்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே வெள்ளி அதிகாலை, 1:30க்கு கயாவை அடையும். மறுமார்க்க ரயில், வரும், 10, 24, பிப்., 7 ஆகிய வெள்ளி இரவு, 11:55க்கு கிளம்பி, திங்கள் காலை, 10:15க்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில்வே ஸ்டேஷனை அடையும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement