திருப்பணி ஆலோசனை

கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரர் கோவில் திருப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள புகழ்பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் கடந்த 2011ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து 12ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த மே மாதம் திருப்பணிகள் துவங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா மற்றும் திருப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. கோவில் செயல்அலுவலர் மாலா தலைமை தாங்கினார். உபயதாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்றனர். தொடர்மழையால் தொய்வடைந்துள்ள திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

Advertisement