ஆஸி., அணி வெற்றி: கோட்டை விட்ட இந்தியா

18


சிட்னி: சிட்னியில் நடந்த 5வது டெஸ்ட் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸி., அணி பார்டர்-கவாஸ்கர் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் ஆஸி., அணி தகுதி பெற்றது.


ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்--கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு டெஸ்ட் முடிவில் இந்தியா, தொடரில் 1--2 என பின்தங்கியுள்ளது. ஐந்தாவது, கடைசி டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 185 ரன் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 9/1 ரன் எடுத்து, 176 ரன் பின்தங்கி இருந்தது.



நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 2வது நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்திருந்தது. இன்று (ஜன.,05) 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இன்றும் ஆஸ்திரேலிய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்.


இதனால் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்திய அணி 39.5 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. 3 விக்கெட்டுகளை பிரசித் கிருஷ்ணா வீழ்த்தி அசத்தினர். எனினும் ஆஸ்திரேலியா அணியின் வெற்றி நடையை இந்திய வீரர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.



ஆஸ்திரேலியா, 27வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு, 162 ரன்கள் எடுத்தது. 5வது டெஸ்ட் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸி., அணி பார்டர்-கவாஸ்கர் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் ஆஸி., அணி தகுதி பெற்றது.

Advertisement