காட்டெருமை தாக்கி பெண் காயம்
ஊட்டி; ஊட்டி அருகே காட்டெருமை தாக்கி பெண் காயம் அடைந்தார்.
கோவை மாவட்டம், காரமடை நரிக்குளி காலனி பகுதியை சேர்ந்தவர் சக்தி,42. இவர் தன்னுடைய மகன் வினு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வேலை விஷயமாக ஊட்டிக்கு வந்தார். வேலை முடிந்துவிட்டு செல்லும்போது துானேரி அருகே சென்றபோது பசுந்தேயிலை பறிப்பதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, சக்தி தேயிலை பறித்து கொண்டிருந்தபோது, புதர் மறைவில் இருந்த காட்டெருமை அவரை தாக்கியது. படுகாயம் அடைந்த அவர் ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் கூறுகையில், 'காட்டெருமையால் காயம் அடைந்தவருக்கு நிவாரணம் பெற்று தர வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement