கட்டபொம்மன் பிறந்த நாள்

திருப்பரங்குன்றம், ; மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக அறக்கட்டளை சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் 266வது பிறந்தநாள் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். வரலாற்றுத் துறை தலைவர் உமா வரவேற்றார். எழுத்தாளர் லட்சுமண பெருமாள் பேசினார்.

பண்பாட்டுக் கழக மாநில தலைவர் மணி, பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் பாண்டியன், கல்லுாரித் தலைவர் ராஜகோபால், துணைத் தலைவர் ஜெயராம், செயலாளர் விஜயராகவன், உதவிச் செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் நாகராஜ் நன்றி கூறினர்.

Advertisement