சந்தேகத்தால் நடந்த விபரீதம் மனைவியை கொன்ற கணவர்

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தாலுகா, கோட்டையூர் மேற்கு காலனியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 26. இவர், மினிவேன் வாயிலாக காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார். அதே ஊர், கிழக்கு காலனியைச் சேர்ந்த ராஜாத்தி, 22, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மனைவி அடிக்கடி போனில் பேசியதால் நடத்தையில் பார்த்திபன் சந்தேகப்பட்டார். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு இப்பிரச்னையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.

பார்த்திபன் கரண்டியால் தாக்கியதில் ராஜாத்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது டாக்டர்கள் பரிசோதித்து, அவர் இறந்ததாக தெரிவித்தனர்.

பார்த்திபனை வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர்.

Advertisement