குமரி கண்ணாடி பாலம் சுற்றுலா பயணியர் ஆர்வம்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைத்து, 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் டிச., 30ல் திறந்து வைத்தார். அடுத்த நாள் முதல் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திறந்து விடப்படவில்லை.

கடல் சீற்றத்தால் விவேகானந்தர் பாறைக்கு படகுகள் ஜன., 4 காலை முதல் இயக்கப்படவில்லை. நேற்று மதியம், 12:30 மணிக்கு நிலைமை சீரானதை தொடர்ந்து படகுகள் இயக்கப்பட்டன. விவேகானந்தர் பாறைக்கு சென்ற பயணியர் ஆர்வத்துடன் கண்ணாடி பாலத்தில் சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர். செல்பி எடுப்பதிலும் ஆர்வம் காட்டினர்.

கலெக்டர் அழகுமீனா கூறுகையில், ''பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசார் மற்றும் பிற துறை அலுவலர்களிடம் பாலத்தில் பாதுகாப்பு பணியில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. அனுமதி வழங்கப்பட்ட ஒன்றரை நாளில், 13,500 பேர் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டனர்,'' என்றார்.

Advertisement