வங்கதேச நாட்டினர் 7 பேர் சுற்றிவளைப்பு

பெருந்துறை: ஈரோடு மாவட்டம், பெருந்துறை போலீசார், நேற்று அதிகாலை பெருந்துறை, ஈரோடு ரோடு, வாய்க்கால் மேடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வந்த ஏழு பேரை பிடித்து விசாரித்தனர். அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், பெருந்துறை அருகே பணிக்கம்பாளையம் பகுதியில், 15 ஆண்டுகளாக தங்கி, வெல்டிங் மற்றும் கட்டட வேலைக்கு சென்று வருவதும் தெரிய வந்தது.

உரிய ஆவணங்கள், அனுமதி இல்லை. இதனால், 22 வயது முதல் 48 வயது வரையிலான ஏழு பேரையும் கைது செய்தனர். பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

Advertisement