தங்கவயலை பாதுகாக்க அனைத்து கட்சி கூட்டம்

தங்கவயல்: தங்கவயலை பாதுகாக்கும் ஐக்கிய முன்னணி கூட்டம், ராபர்ட்சன்பேட்டை வாசவி நிலையத்தில் கூட்டம் நேற்று நடந்தது.

தங்கச் சுரங்க தொழிலாளர் நிலுவைத் தொகை, குடியிருக்கும் வீடுகள் சொந்தம் ஆக்குதல், தங்கவயல் பெமல் தொழிற்சாலையில் தகுதியுள்ள தங்கவயல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தங்கவயலில் நிரந்தர குடிநீர் தீர்வுக்கு எரகோள் அணை நீர், மருத்துவ சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்றோர் வலியுறுத்தினர்.

கூட்டத்தில் என்.ஜி.இ.எப்., முன்னாள் தலைவர் சங்கர், ஆர்.கே.பவுண்டேஷன் அறக்கட்டளைத் தலைவர் மோகன் கிருஷ்ணா, இந்திய கம்யூ., வக்கீல் ஜோதிபாசு, தி.மு.க., சேகர், ஸ்ரீதர், ஐ.என்.டி.யு.சி., பார்த்திபன், பெமல் தொழிற்சங்க முன்னாள் பொதுச் செயலர் ஜெயசீலன், ம.ஜ.த., கணேசன், ராஜாசிங், தமிழ்ச் சங்க செயல் தலைவர் கமல் முனிசாமி, காந்தி காமராஜர் தேசிய மன்றம் செயலர் திருமுருகன், செயல் ஒப்பந்த தொழிலாளர் சங்க ரமேஷ் ஆகியோர் பேசினர். அப்பு ஜெயகுமார் நன்றி கூறினார்.

Advertisement