திருவள்ளுவர் தினம் ஆலோசனை கூட்டம்

பெங்களூரு: திருவள்ளுவர் தினத்தை, வரும் 15ல் சிறப்பாக கொண்டாடுவது குறித்து, விஸ்வகவி திருவள்ளுவர் சங்கம் சார்பில் அதன் தலைவர் பையப்பனஹள்ளி ரமேஷ் தலைமையில் பெங்களூரு தமிழ் சங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

துணைத் தலைவர் ஸ்ரீதரன் வரவேற்றார். இதில், அனைத்து கட்சி, தமிழ் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அத்துடன், தங்கள் கருத்துகளை கூறியதுடன், தங்கள் அமைப்புகள் சார்பில் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் உறுதி அளித்தனர்.

விழா சிறப்புடன் அமைய சாம்ராஜ்பேட் காங்கிரஸ் பிளாக் தலைவர் விநாயகம் ஒரு லட்சம் ரூபாயும்; உரிமைக்குரல் பாரத ரத்னா எம்.ஜி.ஆர்., நலிவுற்றோர் நல அறக்கட்டளை தலைவர் எம்.ஜி.ஆர்., ரவி, 25,000 ரூபாயும் நன்கொடை வழங்கினர்.

பொருளாளர் கோபிநாத் நன்றி கூறினார்.

Advertisement