தங்கவயலில் சாதனையாளர்களுக்கு விருது

தங்கவயல்: அம்பேத்கர் தேசிய சமூக ஆராய்ச்சி மற்றும் நுாலகத்திற்கான நிறுவனம் சார்பில் அம்பேத்கர் நாள்காட்டி வெளியீடு, வாழ்நாள் சாதனையாளர்களுக்கு அம்பேத்கர் விருது வழங்கல் ஆகியவை, ஹென்றிஸ் பகுதி பாட்டை கெங்கையம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.

தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக புத்த பிக்கு கெமண்டோ கலந்து கொண்டார்.

இந்திய குடியரசுக் கட்சியின் தங்கவயல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் மனைவி பாக்கியம்மா, தங்க சுரங்க நிறுவன முன்னாள் தலைமை மேலாளர் சென்னமாலிகா.

முன்னாள் தலைமை பொறியாளர் வின்சென்ட் ஆபிரகாம், பேராசிரியர் குணசேகர், பி.ஜி.எம்.எல்., மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவ அதிகாரி சம்பத் குமார்.

தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன், வாணியம்பாடி முனிசாமி, சண்முகம், பன்னீர் செல்வம், மணவாளன் ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கி அம்பேத்கர் சிலை வழங்கப்பட்டது.

விழாவில் சுந்தரமூர்த்தி பேசுகையில், ''தங்கச்சுரங்க பிரச்னைக்காக 18 தலைவர்கள் டில்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தோம். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் மறக்க முடியாதவர்.

''இதற்காக அவரது மனைவி பாக்கியம்மாவை கவுரவிக்கிறோம்,'' என்றார்.

வின்சென்ட் ஆபிரகாம் பேசுகையில், ''தங்கச்சுரங்க வீடுகளை கட்டித் தரவேண்டாம். இருக்கும் வீடுகளை சொந்தம் ஆக்கினால் போதும். பல மைனிங் பங்களாக்களை வாடகைக்கு விட்டாலே வருமானம் கிடைக்கும்,'' என்றார்.

Advertisement