பல்கலை., மாணவரின் பைக் திருட்டு
புதுச்சேரி : பல்கலைக்கழக மாணவர் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் மதன்ஜி, 33; புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நுாலகத்துறையில் பி.எச்.டி., படித்து வருகிறார். இவர் கடந்த 1ம் தேதி மதியம் 2:00 மணிக்கு தனது பைக்கை, சின்னகாலாப்பட்டு பகுதியில் உள்ள சலுான் கடை எதிரில் நிறுத்திவிட்டுமுடித்திருத்தம் செய்ய சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணவில்லை.
அவர் அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement