கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கூழாங்கற்கள் கடத்திய லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட உதவி புவியியாளர் ரகுநாத் குமார், தனி வருவாய் ஆய்வாளர் ராஜவேல் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மேப்புலியூர்- நாச்சியார்பேட்டை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை தடுத்து நிறுத்தினர். உடன் லாரி டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார்.
பின்னர் லாரியை சோதனை செய்தபோது அனுமதியின்றி 3 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது.
அதன் பேரில் லாரியை பறிமுதல் செய்து உளுந்துார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement