கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்ற டாஸ்மாக் சூப்பர்வைசர் கைது
விருத்தாசலம் : கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்ற டாஸ்மாக் சூப்பர்வைசர் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று வண்ணான்குடிகாடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த அதேபகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் சூப்பர்வைசர் கொளஞ்சி,55; அவரது மகன் தமிழரசன்,27; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement