லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு பாத யாத்திரை

புதுச்சேரி, : புதுச்சேரியில் இருந்து சிங்கிரிகுடி நரசிம்மர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரை சென்றனர்.

உலக நன்மைக்காக ஆண்டுதோறும், ஜனவரி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பஜனை குழுக்கள் மற்றும் பக்தர்கள், சிங்கிரிகுடி நரசிம்மர் கோவிலுக்கு, பாத யாத்திரை செல்வர்.

இந்தாண்டு பாத யாத்திரைநேற்று அதிகாலை காந்தி வீதி, வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்துதுவங்கியது. பல்வேறு பஜனைக்குழுவினர், பக்தர்கள், புதுச்சேரி - கடலுார் சாலை வழியாக சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலை சென்றடைந்தனர்.

பக்தர்களுக்கு வழியில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலில் சுவாமிக்கு திருமஞ்சனம், பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. விழாவில் பஜனை, பக்தி இசை, சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement