கள ஆய்வால் புதிதாக 2,000 ஜி.எஸ்.டி., பதிவு

சென்னை:தமிழகத்தில் ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வணிகம் செய்வோர், ஜி.எஸ்.டி., பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



இதை சிலர் பின்பற்றாமல் உள்ளனர். ஜி.எஸ்.டி., பதிவு செய்யாதவர்கள், குறைந்த விலையில் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்றனர். இதனால், ஜி.எஸ்.டி., பதிவு செய்து, வரி செலுத்துவோரின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, தங்கள் எல்லைக்கு உட்பட்ட
பகுதிகளுக்கு நேரடியாக சென்று தொழில் மற்றும் வணிக நிறுவனங்களை ஆய்வு செய்து,


இதுவரை பதிவு செய்யாதவர்களிடம் படிவம் வழங்கி, இடையூறு ஏற்படுத்தாமல் ஜி.எஸ்.டி., பதிவு செய்ய உதவுமாறு அதிகாரிகளுக்கு, வணிக வரித்துறை கடந்த அக்டோபரில்
உத்தரவிட்டது.இதற்காக, மாதத்தின் இரண்டாவது, நான்காவது வாரங்களில் புதன், வியாழன் ஆகிய நாட்களில் ஆய்வு மேற்கொள்ளுமாறும்தெரிவிக்கப்பட்டது.


இதன் வாயிலாக, கடந்த நான்கு மாதங்களில் புதிதாக, 2,000 வணிகர்கள் ஜி.எஸ்.டி., பதிவு
செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக, 11.50 லட்சம்
வணிகர்கள் ஜி.எஸ்.டி., பதிவு செய்துள்ளனர்.

Advertisement