'நாட்டின் வளர்ச்சி 6.40 சதவிகிதம் ஆக இருக்கும்'
புதுடில்லி:வரும் மார்ச்சுடன் முடியவுள்ள நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம்
6.40 சதவீதம் வளர்ச்சி அடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நடப்பு 2024 - 25ம் நிதியாண்டுக்கான முதற்கட்ட முன்கூட்டிய ஜி.டி.பி., மதிப்பீட்டை மத்திய
புள்ளியியல் அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில் கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் 8.20
சதவீதமாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இந்த நிதியாண்டில் 6.40 சதவீதமாக
இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, 1.80 சதவீதம் குறைவாகும்.
ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 6.60 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் என கணித்திருந்த நிலையில், அரசின் கணிப்பு அதைவிடக் குறைவாகும்.இந்த கணிப்பு சரியாக இருந்தால், கடந்த 2020 - 21ம் நிதியாண்டுக்குப் பிறகு, இதுவே குறைந்தபட்ச பொருளாதார வளர்ச்சியாக இருக்கும். கொரோனா காரணமாக அப்போது வளர்ச்சி மைனஸ் 5.80 சதவீதமாக சரிந்தது.
தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் சுமாரான செயல்பாடே நடப்பு நிதியாண்டில்
வளர்ச்சி சரிய முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. தயாரிப்புத் துறையின் வளர்ச்சி
5.30 சதவீதமாகவும்; சேவைகள் துறையின் வளர்ச்சி 5.80 சதவீதமாகவும் குறையும் என
கணிக்கப்பட்டுள்ளது.