இந்தியாவில் ரூ.25,000 கோடி முதலீடு: நாதெள்ளா
பெங்களூரு:இந்தியாவில் கிட்டத்தட்ட 25,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள சத்யா நாதெள்ளா பிரதமர் மோடியை சந்தித்தார்.இந்தியாவில்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐ., விரிவாக்க பணிகள் குறித்து
அப்போது விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டே மைக்ரோசாப்ட் செயல்பட்டு வருவதாக நாதெள்ளா தெரிவித்தார்.
இதன்படி, அசூர் கிளவுட் சேமிப்பு வசதியை விரிவுபடுத்த 25,500 கோடி ரூபாய் முதலீடு
செய்யப்படும் என்றும்; வரும் 2030க்குள் ஒரு கோடி இந்தியர்களுக்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் நாதெள்ளா கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement