டில்லியிலும் பிப்., 5ல் தேர்தல்

டில்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளதாக தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

டில்லியில், முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டசபையின் பதவிக்காலம், அடுத்த மாதம் 23ம் தேதியுடன் முடிவடைகிறது.

மும்முனை போட்டி

அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், அரசியல் கட்சிகள் ஏற்கனவே களமிறங்கி பிரசாரத்தை துவக்கிவிட்டன.

ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஆம் ஆத்மி கடுமையாக போராடி வருகிறது. அவர்களிடம் இருந்து ஆட்சியை பறிக்க பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் நேற்று அறிவித்தார். டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

டில்லி சட்டசபை தேர்தல் பிப்., 5ல் ஒரே கட்டமாக நடக்க உள்ளது.

இங்கு மொத்தம், 70 தொகுதிகள் உள்ளன. அவற்றில் ரிசர்வ் தொகுதிகள் 12. மொத்த வாக்காளர்கள் 1.55 கோடி பேர்.

13,033 ஓட்டுச்சாவடி

இதில் ஆண்கள், 83.49 லட்சம். பெண்கள் 71.74 லட்சம். இளைஞர்கள் 25.89 லட்சம். முதல்முறை வாக்காளர்கள் 2.08 லட்சம்.

மொத்தம், 2,697 இடங்களில் 13,033 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. மும்பையைப் போலவே டில்லியிலும் குடிநீர், கழிப்பறை வசதிகளும் ஓட்டுச்சாவடிகளில் அமைக்கப்பட உள்ளன. உ.பி.,யின் மில்கிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் பிப்., 5ல் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேட்பு மனு தாக்கல்

சிறப்பு அறிவிப்பு கூடாது

பிப்., 5ல் டில்லி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கு சில தினங்கள் முன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சரிசமமான களம் வேண்டும். ''எனவே, பட்ஜெட்டில் டில்லிக்கு என பிரத்யேகமான அறிவிப்புகள் எதுவும் இடம் பெறக்கூடாது என்று மத்திய அமைச்சரவை செயலருக்கு கடிதம் எழுத உள்ளோம்,'' என, தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.

துவக்கம்10.1.2025

நிறைவு 17.1.2025

பரிசீலனை 18.1.2025

வாபஸ் 20.1.2025

தேர்தல் தேதி 5.2.2025

ஓட்டு எண்ணிக்கை 8.2.2025

சிறப்பு அறிவிப்பு கூடாது

பிப்., 5ல் டில்லி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கு சில தினங்கள் முன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சரிசமமான களம் வேண்டும். ''எனவே, பட்ஜெட்டில் டில்லிக்கு என பிரத்யேகமான அறிவிப்புகள் எதுவும் இடம் பெறக்கூடாது என்று மத்திய அமைச்சரவை செயலருக்கு கடிதம் எழுத உள்ளோம்,'' என, தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.

- நமது நிருபர் குழு -

Advertisement