பொங்கலுக்கு 300 'டிரிப்' சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கலுக்கு 300 'டிரிப்' சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஈரோடு, : ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும், 10ம் தேதி முதல், 14ம் தேதி வரை ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது. கோவை, மதுரை, சென்னை, திருச்செந்துார், ராமேஸ்வரம், நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்சி, பழனி, சேலம், நாமக்கல், கரூர், சத்தியமங்கலம், ராசிபுரம் உட்பட பல்வேறு நகரங்களுக்கு, 300 புறப்பாடுகள் (டிரிப்) இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement