அம்மாபேட்டையில் மறியல்


அம்மாபேட்டையில் மறியல்

பவானி, அம்மாபேட்டை யூனியன் படவல்கால்வாய் பஞ்சாயத்தை, அம்மாபேட்டை பேரூராட்சியுடன் இணைக்க அரசாணை வெளியாகியுள்ளது. இதனால் நுாறு நாள் வேலைத்திட்டம் கிடைக்காது என்பதால், பேரூராட்சியுடன் இணைக்க பஞ்., மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இதை பதிவு செய்யும் வகையில், சிங்கம்பேட்டை கேட் அருகில், பவானி-மேட்டூர் பிரதான சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை போலீசார், யூனியன் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுக்கு கோரிக்கை மனு கொடுக்க அறிவுறுத்தவே, மனு வழங்கி மக்கள் கலைந்து சென்றனர். திடீர் மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement