சாக்கடையில் பெண் சடலம்


சாக்கடையில் பெண் சடலம்


ஈரோடு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், கோணவாய்க்காலை சேர்ந்தவர் சாந்தி, 58; ஈரோடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆறு மாதங்களாக யாசகம் எடுத்து வந்தார். நேற்று அதிகாலை அகில்மேடு வீதியில் சாக்கடைக்குள் தலைகுப்புற கிடந்தார். மக்கள் தகவலின்படி சென்ற ஈரோடு டவுன் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் சாந்தி உடலை மீட்டனர். தலையில் ரத்த காயம் இருந்தது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். உறவினர்களை கண்டுபிடித்து உடலை ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement