மணல் கடத்தியவர் கைது



மணல் கடத்தியவர் கைது

பவானி, வெள்ளித்திருப்பூர் அருகே கோவிலுார் புங்கமடுவுபள்ளத்தில், மணல் கடத்துவதாக, அந்தியூர் வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எண்ணமங்கலம் அருகே குன்னிக்காட்டில், ஆர்.ஐ., செந்தில்ராஜா மற்றும் வருவாய் துறையினர் இரவில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு டிராக்டரில் மணல் இருந்தது. ஆனால், உரி ஆவணம் இல்லை. டிராக்டரை பறிமுதல் செய்து வெள்ளித்திருப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். புகாரின்படி டிராக்டரை ஓட்டி வந்த தோணிமடுவை சேர்ந்த மணி, 47, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement