விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி

ஈரோடு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், ஆட்சி மொழி சட்ட வாரத்தை முன்னிட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரசு பணியாளர், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்ற பேரணியை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார். சம்பத் நகர், நவீன நுாலகம் வரை சென்று நிறைவு செய்தனர். தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement