நாளை முதல் யோகா

மதுரை: மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் நாளை(ஜன.8) முதல் ஒருமாதம் யோகா பயிற்சி நடக்கிறது. தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திரில் தினமும் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும், பெண்களுக்கு அருகில் உள்ள பாலாஜி நர்சிங் ேஹாமில் தினமும் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படும்.

உயர் ரத்தஅழுத்தம், உடல் வலி, மூட்டு வலி, உடல் பருமன், ஹார்மோன் பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவும். மூச்சுப்பயிற்சி, தியானமும் கற்றுத்தரப்படும். மேலும் விபரங்களுக்கு இயக்குநர் கங்காதரனை 88834 21666ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement