கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய தொடர்பு எண்கள் வெளியீடு

புதுச்சேரி: கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான தொடர்பு எண்களை உழவர்கரை நகராட்சி வெளியிட்டுள்ளது.

ஆணையர் சுரேஷ்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பாதாள சாக்கடை வசதி இல்லாத இடங்களில் வீடு, வியாபார நிறுவனங்களில் உள்ள மலக்கசடு கழிவு நீர் தொட்டியை 3 ஆண்டிற்கு ஒருமுறை சுத்தம் செய்வது கட்டாயம். இல்லையெனில் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு நகராட்சியில் அதற்கான வாகனம் உள்ளது. அதற்கான கட்டணம் ஒரு நடைக்கு ரூ.3,800 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உழவர்கரை நகராட்சியின் சேவையை பெற சுகாதா பிரிவு 0413-2200382, 94421-21140 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் நகராட்சியின் அனுமதி பெற்ற தனியார் கழிவு நீர் சுத்தம் செய்பவர்கள் கருப்பசாமி செப்டிக் டேங்க் கிளீனிக்-9600661766, தீபக் செப்டிக் டேங்க் கிளீனிங்-9500333985, அம்மன் செப்டிக் டேங்க் கிளீனிங்-9597552911, ரம்யா செப்டிக் டேங்க் கிளீனிங்-9087935296 ஆகியோரை தொடர்பு கொண்டு அதற்குண்டான கட்டணத்தை செலுத்தி பாதுகாப்பான முறையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்து கொள்ளலாம்.

நகராட்சி அனுமதி இல்லாத வாகனங்களை பயன்படுத்த வேண்டாம். மேலும் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது சட்டப்படி குற்றமாகும். எனவே பணியாட்களை கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டாம். தவறினால் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement