தண்டவாளம் பராமரிப்பு மாற்றுவழியில் ரயில்கள்

திண்டுக்கல்:திண்டுக்கல் ரயில் வழித்தடத்தில் தண்டவாளம், மின் பராமரிப்பு பணிகள் நடப்பதால் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன.

திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும் 80க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள் செல்கின்றன. இங்கிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வெளியூருக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வழித்தடத்தில் தண்டவாளங்கள், மின் ஒயர் பராமரிப்பு பணிகள் நடந்தது. இதனால் கோவை, குருவாயூர், மும்பை, மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் நேற்று ஒரு நாள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக திண்டுக்கல் வராமல் இயக்கப்பட்டன. இதனால் இந்த ரயில்களை நம்பி வழக்கமாக பயணிப்பவர்கள் ஏமாற்றமடைந்தனர். வேறு ரயில்களில் அவர்கள் சென்றனர்.

Advertisement