'கொடை'யில் திடீரென உருவான பனிமூட்டம்
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் பனிமூட்டம் நிலவி கடுங்குளிர் நிலவியது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒரு வாரமாக உறை பனியின் தாக்கம் அதிகரித்து வறண்ட வானிலை நீடித்த நிலையில் நேற்று காலை முதலே கொடைக்கானலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பின் நகரை பனிமூட்டம் சூழ்ந்தது இயல்பை காட்டிலும் பகலிலும் கடுங்குளிர் நிலவியது.
இதனால் குளிரை தாங்கும் ஆயத்த ஆடைகளான ஸ்வட்டர் அணிந்து சுற்றுலாப்பயணிகள் நடமாடினர். வில்பட்டி, மன்னவனுார் உள்ளிட்ட மேல் மலைப்பகுதியில் அடர் பனி மூட்டம் நிலவியதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement