சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பூர்; சாலை பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு ஆண்டும் போலீசார், வட் டார போக்குவரத்து துறையினர் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வகையில், திருப்பூர் மாநகர போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புஷ்பா சந்திப்பு, மாநகராட்சி சந்திப்பில் போக்குவரத்து போலீசார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர்.

அதில், வடக்கு துணை கமிஷனர் சுஜாதா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று, வாகன ஓட்டிகள், பாதசாரிகளிடம் சாலை விதிகளை பின்பற்றுவது, வாகனம் ஓட்டும் போது 'ஹெல்மெட்' அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ்களை வழங்கினர்.

Advertisement