கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
திருப்பூர்; வெள்ளகோவில் கொங்கு வேளாளர் அறக்கட்டளை கீழ் செயல்பட்டு வரும் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் சண்முகம் தலைமை வகித்தார். மீனா மருத்துவமனை டாக்டர் சாந்தமீனா குத்துவிளக்கு ஏற்றினார். பள்ளி செயலாளர் சக்திவேல் வரவேற்றார். பள்ளி முதல்வர் விஷ்ணுபிரியா ஆண்டறிக்கை வாசித்தார்.தஞ்சாவூர் தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்ரமணியம் பேசுகையில், ''மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் பள்ளிகளில் கல்வி மற்றும் ஒழுக்கம் போன்றவற்றில் சிறந்து விளங்குவதுடன், தங்களது பெற்றோர்களை வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வக்கீல் ஈஸ்வரமூர்த்தி, டாக்டர் செந்தில் ஆகியோர் பரிசு வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement