'நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்': பிரதமர் மோடி

புதுடில்லி: '' நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்,'' எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


ஜெரோதா(Zerodha) நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத்தின் 'பாட்காஸ்ட்' டில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். அதன் முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது.


அதில் பிரதமர் கூறியுள்ளதாவது: பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது இது முதல் முறையாகும்.சர்வதேச மோதல் விவகாரம் குறித்த விவகாரங்களில் இந்தியா நடுநிலையாக இல்லை. அமைதியின் பக்கம் உள்ளது என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறோம் என்றார்.


குஜராத் முதல்வராக இருந்த போது கூறியதை நினைவு கூர்ந்து மோடி கூறும்போது, தவறு என்பது தவிர்க்க இயலாதது. நானும் தவறு செய்திருக்கலாம். நானும் மனிதர் தான். கடவுள் கிடையாது என்றார்.


மேலும் அவர், அரசியல்வாதிகளாக விரும்பும் அவர் ஒரு குறிக்கோளுடன் வர வேண்டும். லட்சியத்துடன் அல்ல. நல்லவர்கள் தொடர்ந்து அரசியலுக்கு வர வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Advertisement