காலிறுதியில் சாத்விக்-சிராக் * மலேசிய பாட்மின்டனில்

கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறியது.
மலேசியாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில், இந்தியாவின் சாத்வித்சாய்ராஜ், சிராக் ஜோடி, மலேசியாவின் வீ கியாங், அயுப் அஸ்ரின் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-15, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் 26 வது இடத்திலுள்ள இந்தியாவின் பிரனாய், உலகின் 'நம்பர்-7' வீரர் ஷி பெங்குடன் மோதினார். இதில் பிரனாய், 8-21, 21-15, 21-23 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தார்.
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மாளவிகா, 18-21, 11-21 என, சீனாவின் யு ஹானிடம் தோல்வியடைந்தார். பெண்கள் இரட்டையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி, சீனாவின் ஜியா, ஜங் ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 21-15, 18-21, 19-21 என போராடி தோல்வியடைந்தது.

Advertisement