கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழப்பு எதிரொலி: திருப்பதி டிஎஸ்பி சஸ்பெண்ட்: அதிகாரிகள் மாற்றம்

5

திருப்பதி: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த நிலையில், டிஎஸ்பி உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். மேலும் இரண்டு பேர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.


திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க பக்தர்கள் நின்றிருந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு ஆந்திர அரசு நிவாரணம் அறிவித்து உள்ளது.

Latest Tamil News
இந்நிலையில் கூட்ட நெரிசலை பார்வையிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி டிஎஸ்பி ரமண குமார் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்.வி.பால் பண்ணை இயக்குநர் ஹரிநாத ரெட்டி ஆகியோர் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார். மேலும், திருப்பதி எஸ்பி எல் .சுப்பராயுடு, இணை செயல் அதிகாரி எம்.கவுதமி, திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்தும் ஆறுதல் கூறினார்.


பிறகு நிருபர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: கோவில் ஊழியர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன், கோவிலின் புனிதம் கெட்டுவிடாத அளவுக்கு பணியாற்ற வேண்டும். கூட்ட நெரிசல் எப்படி நேரிட்டது என தேவஸ்தான அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது என்றார்.

Advertisement