தமிழக அணி ஏமாற்றம் * விஜய் ஹசாரே போட்டியில்

வதோதரா: விஜய் ஹசாரே தொடரில் இருந்து வெளியேறியது தமிழகம். நேற்று நடந்த காலிறுதி 'பிளே ஆப்' போட்டியில் 19 ரன்னில் ராஜஸ்தானிடம் தோல்வியடைந்தது.
குஜராத்தின் வதோதராவில் நேற்று நடந்த விஜய் ஹசாரே டிராபி தொடரின் காலிறுதி 'பிளே ஆப்' போட்டியில் தமிழகம், ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தமிழக அணி கேப்டன் சாய் கிஷோர் பீல்டிங் தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் கேப்டன் லாம்ரர் (60), சதம் விளாசிய அபிஜீத் (111), கார்த்திக் சர்மா (35) கைகொடுத்தனர். 47.3 ஓவரில் 267 ரன்னில் ஆல் அவுட்டானது.
தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் சாய்த்தார்.
பின் களமிறங்கிய தமிழக அணிக்கு துஷார் (11), ஜெகதீசன் (65) ஜோடி துவக்கம் தந்தது. பாபா இந்திரஜித் (37), விஜய் சங்கர் (49), முகமது அலி (34) ஆறுதல் தந்தனர். 47.1 ஓவரில் 248 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வியடைந்தது. காலிறுதி வாய்ப்பை இழந்தது.
மற்றொரு போட்டியில் ஹரியானா அணி (298/9), 72 ரன்னில் பெங்காலை (226/10) வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.

பெங்கால் சார்பில் முகமது ஷமி 3 விக்கெட் சாய்த்து ஆறுதல் தந்தார்.

ஜெகதீசன் சாதனை
நேற்று அமன் ஷெகாவத் 2வது ஓவரை வீசினார். தமிழக வீரர் ஜெகதீசன் எதிர்கொண்டார். வைடாக வீசப்பட்ட முதல் பந்து, பவுண்டரிக்கு செல்ல, 5 ரன் உதிரியாக கிடைத்தது. அடுத்து வீசிய 6 பந்திலும் 4, 4, 4, 4, 4, 4, என 6 பவுண்டரி அடித்து மிரட்டினார் ஜெகதீசன். இந்த ஓவரில் 29 ரன் (24+5) கிடைத்தன. இதையடுத்து 'லிஸ்ட் ஏ' (விஜய் ஹசாரே) கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் தொடர்ந்து 6 பவுண்டரி அடித்த வீரர் ஆனார்.

Advertisement