மியான்மர் ராணுவத்தின் விமான தாக்குதல்: 40 பேர் பலியான சோகம்

1

நைபைடவ்: மியான்மர் ராணுவம் விமானப்படை மூலம் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.


மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அங்கு, ராணுவத்திற்கும், ஆயுதம் ஏந்திய இன சிறுபான்மையினர், புரட்சி குழுக்கள் இடையே அடிக்கடி மோதல் நீடித்து வருகிறது. இதில், பல பகுதிகளை ஆயுதக்குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதனால், அந்நாட்டு மக்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.


இந்நிலையில், ராம்ரீ தீவில் அந்நாட்டு நேரப்படி மதியம் 1:30 மணியளவில், மியான்மர் ராணுவம் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பற்றி எரிந்தன. மேலும் இந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.20க்கும் மேற்பட்டோர்கள் காயமடைந்துள்ளனர்.


இங்கு இணைய சேவை உள்ளிட்ட தொலைத்தொடர்பு வசதிகள் ஏதும் இல்லை. இதனால், அக்கிராமத்தின் உண்மையான நிலவரம் பற்றி தகவல் வெளியாகவில்லை.

Advertisement