காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு; குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்கள் 4 பேருக்கு நீதிமன்றம் ஜாமின்

ஒட்டாவா: காலிஸ்தான் பயங்கரவாதி, ஹர்தீப் நிஜ்ஜார் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்கள் 4 பேருக்கும் கனடா நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.


வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில், 2023 ஜூன் 18ல் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்த நாட்டின் பார்லிமென்டில் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தால், கனடா - இந்தியா இடையேயான துாதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த வழக்கில்,2024ம் ஆண்டு மே மாதம் ஆல்பர்ட்டா மாகாணத்தின் எட்மன்டன் என்ற பகுதியில் வசிக்கும் கரண் பிரார், 22, கமல்ப்ரீத் சிங், 22, கரன்ப்ரீத் சிங், 28, அமந்தீப் சிங் ஆகிய இந்தியர்கள் 4 பேரை கனடா போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில், இந்தியர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. இவை ஆதாரமற்றவை என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.



இது தொடர்பாக, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று (ஜன.,09) விசாரணைக்கு வந்தது. அப்போது காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கொன்றதாக, குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்கள் 4 பேருக்கும் இன்று (ஜன.,09) கனடா நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

Advertisement