திண்டுக்கல் - திருச்சி ரயில் பாதை மேம்பாட்டு பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சென்னை:திண்டுக்கல் - திருச்சி ரயில் பாதை பிரிவில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடப்பதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் இருந்து ஜன., 24, 25, 27, 28, 30 ஆகிய நாட்களில் காலை 7.05 மணிக்கு புறப்பட வேண்டிய மயிலாடுதுறை விரைவு ரயில், கன்னியாகுமரியில் இருந்து
ஜன . 25 புறப்பட வேண்டிய கொல்கத்தா ஹௌரா விரைவு ரயில், நாகர்கோவிலில் இருந்து ஜன.,28 புறப்பட வேண்டியசிஎஸ்டி மும்பை விரைவு ரயில், குருவாயூரிலிருந்து ஜன., 24, 27, 29 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில், நாகர்கோவிலில் இருந்து ஜன., 25 புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரயில், நாகர்கோவிலில் இருந்து ஜன. 28 புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை விரைவு ரயில், நாகர்கோவிலில் இருந்து
ஜன., 30 புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை விரைவு ரயில் ஆகியவை, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும்.
மானாமதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மயிலாடுதுறையிலிருந்துஜன .,30 புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில், பனாரஸிலிருந்து ஜன. 26 புறப்பட வேண்டிய கன்னியாகுமரி தமிழ்ச்சங்கம் விரைவு ரயில் ஆகியவை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து ஜன. 25 மற்றும் 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில்கள் கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
ரயில்கள் பகுதி ரத்து
சென்னை எழும்பூர் மற்றும் மதுரையிலிருந்து ஜன. 25 மற்றும் 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை மற்றும் சென்னை எழும்பூர் தேஜாஸ் விரைவு ரயில்கள், திருச்சி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்.
ஈரோட்டில் இருந்து ஜன. 24 மற்றும் 27 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் மற்றும் செங்கோட்டையில் இருந்து ஜன. 25 மற்றும் 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஈரோடு விரைவு ரயில் ஆகியவை கரூர் - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
ஓகாவில் இருந்து ஜன. 27 மற்றும் மதுரையில் இருந்து ஜன. 31 புறப்பட வேண்டிய மதுரை மற்றும் ஓகா சிறப்பு ரயில்கள் விழுப்புரம் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
தாமதமாக புறப்படும் ரயில்
மதுரையில் இருந்து ஜன. 30 காலை 11.55 புறப்பட வேண்டிய பிகானிர் ரயில் மதியம் 2 மணிக்கு காலதாமதமாக புறப்படும்.