சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண் பொறியாளர்களுக்கு வேலை!
சென்னை:சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண் பொறியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உள்ளமைப்பு பணியாளர்களில் 21 % பெண்களும், வெளி ஒப்பந்தத பணியாளர்களில் 50% பெண்களும் பணியாற்றி வருகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கையரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மெட்ரோ 2-வது கட்டத்தில் முழுமையாக பெண்களால் மட்டுமே இயக்கப்படும் ரயில் நிலையங்களை நிறுவுவதற்கான வாய்ப்புகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
இந்நிறுவனத்தில் தகுதியும் அனுபவமும் வாய்ந்த பெண் பொறியாளர்களுக்கான எட்டு உதவி மேலாளர் (சிவில்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
''பொறியியல் துறையில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களது வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம். இந்த சிறப்பு மற்றும் பிரத்யேகமான பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை, எங்கள் பாலின சமத்துவ இலக்குகளை அடைவதற்கான ஒரு முக்கியமான படியாகும்,'' என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.
முக்கிய விவரங்கள்:* பதவி: உதவி மேலாளர் (சிவில்)
* பணியிடங்களின் எண்ணிக்கை: 8
* குறைந்தபட்ச அனுபவம்: 2 வருடங்கள்
* அதிகபட்ச வயது: 30 வருடங்கள் (தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வுஅளிக்கப்படும்)
* ஒருங்கிணைந்த ஊதியம்: மாதம் ரூ. 62,000/-
* விரிவான வேலைவாய்ப்பு அறிவிப்பு சென்னை மெட்ரோ இரயில் நிறுவத்தின் இணையதளத்தில் https://chennaimetrorail.org/job-notifications/ என்ற URL இல் 10-01-2025 அன்று அல்லதுஅதற்கு முன்னர் வெளியிடப்படும்.
* தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் பரிசீலனை செய்யப்படும்.
* விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி தேதி 10-02-2025.