அரையிறுதியில் இந்திய ஜோடி * உலக டேபிள் டென்னிஸ் தொடரில்

தோகா: கத்தாரில் உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் மானவ் தக்கார், மனுஷ் ஷா ஜோடி, ஹாங்காங்கின் குவான் மான், லாங் சியு ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 3-0 (11-5, 11-3, 11-6) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சரத்கமல், ஸ்னேஹித் ஜோடி 0-3 என (4-11, 8-11, 6-11) ஜப்பானின் சோரா, ஹரிமோட்டா ஜோடியில் வீழ்ந்தது.
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, போர்ச்சுகலின் ஜியனி ஷாத்தை சந்தித்தார். இதில் ஸ்ரீஜா 3-1 (11-7, 11-7, 7-11, 11-3) என வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா, 1-3 என (12-10, 8-11, 8-11, 3-11) நெதர்லாந்தின் பிரிட்டிடம் தோல்வியடைந்தார்.

Advertisement